Wednesday, July 6

சாய்ந்தமருதில் உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்களில் (வேக்கரி) தொழில் புரியும் உணவு உற்பத்தியாளருக்கான செயலமர்வு




அம்பாறை மாவட்டத்திலுள்ள உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்களில் (வேக்கரி) தொழில் புரியும் உணவு உற்பத்தியாளருக்கான சுத்தமான,
சுகாதாரமான உணவுகளை உயர்ந்த போசாக்குடன் குறைந்த விலையில் உற்பத்தி செய்து பொதுமக்களுக்கு வழங்குவது சம்மந்தமாக விளக்கமளிக்கும் செயல்முறை செயலமர்வொன்று இன்று சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

பிரமிட் வில்மா கொம்பனியின் அனுசரனையுடன் அம்பாறை மாவட்ட விற்பனை வினியோகஸ்தர் எம்.எச்.எம்.ஹனிப் தலைமையில் நடைபெற்ற இச்செயலமவர்வில் அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில்,அம்பாறை,பாலமுனை, மருதமுனை,சம்மாந்துறை, கல்முனை, மாளிகைக்காடு மற்றும் சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களைச்சேர்ந்த உணவு உற்பத்தியாளர்கள் பங்கு கொண்டனர்.

பிரமிட் வில்மா கொம்பனியின் விற்பனை கட்டுப்பாட்டு முகாமையாளர் பிரியந்த கொலனக்கே பிரதம அதிதியாகவும பிராந்திய விற்பனை முகாமையாளர் என். ரவிந்திரன்இ பிராந்திய முகாமையாளர்களான நளின் அமேரசேகரஇ அநுராத ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment