Wednesday, July 6

நான்கு பேர் அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றம்


நான்கு பேர் அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றம்



சம்மாந்துறை தாருசலாம் மகாவித்தியாலயத்தில் நீர் நஞ்சானதால் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுள் நால்வர் அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏனையவர்கள் சிகிச்சை பெற்று வீடுதிரும்பியுள்ளதாகவும் அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபரின் கண்காணிப்பில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாடசாலையில் மாணவர்கள் பாவனைக்கு உட்படுத்தப்படுத்தும் நீர்பம்பியின் அருகில் கிருமி நாசினி போத்தல் ஒன்று பொலிஸாரு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், நீர் மாதிரி பரிசோதனைக்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சம்மாந்துறை தாருசலாம் மகாவித்தியாலயத்தில் நேற்றைய தினம் நீர் நஞ்சானதில் சுமார் 150 மாணவர்கள் வரை பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment