இலங்கை பாடசாலை உதைபந்தாட்ட சங்கம் நடாத்தும் பத்தொன்பது வயதுக்கு கீழ்பட்ட அகில இலங்கை ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டியின் இரண்டாம் கட்டம் முதல் தடவையாக கிழக்கு மாகாணத்தில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஏற்பாட்டாளர் அலியார் பைசர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் இலங்கை பாடசாலை உதைபந்தாட்ட சங்கத்தின் செயலாளர் உபாலி சில்வா ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
கல்முனை வெஸ்லி உயர்தர பாட சாலை மற்றும் அம்பாறை சதாதிஸ்ஸ வித்தியாலய மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன இந்த வைபவம் ஆரம்பிக்கப் பட்டது. இதன்போது இலங்கை பாடசாலை உதைபந்தாட்ட சங்கத்தின் உத்தியோகபூர்வ சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப் பட்டது.

No comments:
Post a Comment