அம்பாறை மாவட்டத்தில்
முன்னெடுக்கப்பட்ட பல அபிவிருத்தி திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும்
நிகழ்வின் ஒரு கட்டமாக கல்முனை, சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுகளில் புதிதாக
அமைக்கப்படவுள்ள வீதிகள் மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களுக்கான அடிக்கல்
நடுதல் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கிழக்கு மாகாண
அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வையின் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலக மண்டபத்தில்
நடைபெற்றது.
இதன்போது எதிர்வரும் 17ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை புதிய அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வுகள் நடைபெறும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் ஏ.எம்.அன்சார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.துல்கர் நயீம், வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர் கலாநிதி ஏ.எம்,ரிஸ்வி, ஜெய்கா செயற்திட்ட ஆலோசனைப் பொறியியலாளர் எம்.ஐ.இல்ஹாம் ஜெஸீல், பிரதேச செயலாளர்களான ஏ.எல்.எம்.சலீம், எம்.எம்.நௌபல், ஆகியோருடன் சாய்ந்தமருது பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இவ்வைபவங்களில் பிரதம அதிதியாக உள்நாட்டு, மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

No comments:
Post a Comment