Friday, June 22

அக்கரைப்பற்றில் உயிர்பலி எடுத்த வாகனத்தை பொது மக்கள் தீ வைத்து எரித்ததால் பதற்றம்

உயிர்பலி எடுத்த வாகனத்தை பொது மக்கள் தீ வைத்து எரித்ததால் பதற்றம்!அக்கரைப்பற்று - வம்மியடி பிரதேசத்தில் கொள்கலன் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி நேற்று (21) மாலை இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த பொது மக்கள் கொள்கலன் ரக வாகனத்தை தீயிட்டு எரித்ததாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறையில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கி சென்று கொண்டிருந்த கொள்கலன் ரக வாகனம் அக்கரைப்பற்றில் இருந்து குடியிருப்பு பிரதேசத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி வம்மியடிச் சந்தியில் விபத்து ஏற்பட்டுள்ளது.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் துடுப்பை பிடித்தபோது மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்தவர் கீழே வீழ்ந்த நிலையில் எதிரேவந்த கொள்கலன் அவர் மீது மோதியுள்ளது.

விபத்தில் அக்கரைப்பற்று குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்த ஹதர் அலி றமீஸ் 28 வயது இளம் குடும்பஸ்தர் பரிதாபகரமா உயிரிழந்துள்ளார்.

விபத்தையடுத்து கொள்கலன் சாரதி தப்பியோடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

பொதுமக்கள் வானகத்திற்கு தீ வைத்ததால் அப்பகுதியில் சற்று பதற்றம் நிலவியது. சம்பவ இடத்திற்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் விரைந்து நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

உயிர்பலி எடுத்த வாகனத்தை பொது மக்கள் தீ வைத்து எரித்ததால் பதற்றம்!

No comments:

Post a Comment