கிழக்கு மாகாண விளையாட்டு விழாவின் ஏற்பாட்டாளர்களால் அங்கு செய்தி
சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர்கள் தாம் அவமானப்படுத்தப்பட்டதாக கூறி,
நிகழ்வினைப் பகிஷ்கரித்து விட்டு குறித்த இடத்திலிருந்து வெளியேறியதாக
அறிவித்தனர்.
கிழக்கு மாகாண விளையாட்டு விழா இன்று சனிக்கிழமை காலை அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் ஆரம்பாகியது.
இவ்விழாவில் கலந்து கொண்டு, அங்கு இடம்பெறும் நிகழ்வுகளைச் செய்தியாக்குமாறு விழா ஏற்பாட்டாளர்களால் பிரதேச ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இதற்கிணங்க – விளையாட்டு விழா தொடர்பான செய்திகளைச் சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் அங்கு சென்றிருந்தனர்.
இந்த நிலையில், செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர்கள் தமக்கு இடையூறாக இருப்பதாக அங்கிருந்த ஏற்பாட்டாளர்கள் சிலர் தெரிவித்ததோடு, இது குறித்து ஒலி பெருக்கியிலும் அறிவித்தனர். இச்சம்பவமானது, ஊடகவியலாளர்களை அசௌகரியத்துக்கும், அவமானத்துக்கும் உள்ளாக்கியது.
இதனையடுத்து, அங்கு செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர்கள் - இது தொடர்பில் தமது அதிருப்தியினை விழாவுக்குத் தலைமை வகிக்கும் கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.எம்.நசீர் ஆகியோரிடம் தெரிவித்து விட்டு, அங்கிருந்து வெளியேறினார்கள்.

No comments:
Post a Comment