Sunday, June 24

கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் ஊடகவியலாளர்கள் அவமதிப்புக்கு பகிரங்க மன்னிப்பு கோரினார் மாகாண அமைச்சர்




கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர்கள் - விழா ஏற்பாட்டாளார்களினால் அவமதிக்கப்பட்டமைக்கு மன்னிப்பு கோருவதாக கிழக்கு மாகாண விளையாட்டு துறை அமைச்சர் எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை கூட்டுறவு சங்க கூட்ட மண்டபத்தில் அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் எம்.எஸ்.சுபையிர் ஆகியோர் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இச்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் சுபையிர் ஊடகவியலாளர்களிடம் மேற்கண்டவாறு பகிரங்க மன்னிப்பினைக் கோரினார்.

இவ்விவகாரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்ளூ

"கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையின் வேண்டுகோளுக்கு இணங்கவே மாகாண விளையாட்டு விழாவினை இம்முறை அட்டாளைச்சேனையில் நடத்துகின்றோம்.

விளையாட்டு விழாவினை நடத்துவதற்கு அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகள் பணிக்கப்பட்டுள்ளனர். இவர்களினால் விடப்பட்ட தவறுகளின் காரணமாக - சில ஊடகவியலாளர்களுக்கு உரிய வகையில் அழைப்பிதழ்களும் கிடைக்கவில்லை.

அதேபோன்று, ஊடகவியலாளர்கள் விளையாட்டு விழாவின் போது, அவமதிப்புக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே, இவை தொடர்பில் எனது வருத்தத்தினைத் தெரிவிப்பதோடு, இதற்காக ஊடகவியலாளர்களாகிய உங்களிடம் எனது மன்னிப்பினையும் கோருகின்றேன்" என்றார்.


No comments:

Post a Comment