Friday, June 22

அம்பாறை மாவட்ட உயர் பதவிக்கு சிறுபான்மையினர் புறகணிப்பு: ஹஸன் அலி கடிதம்


F.M.பர்ஹான்: இலங்கை வங்கியின் அம்பாறை மாவட்ட முகாமையாளராக இதுவரை பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்ததவர்களே நியமிக்கப்பட்டு வந்துள்ளனர் முதன்முறையாக இப்பதவிக்கு கடந்த ஜனவரிமாதம் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த எஸ்.எம். அப்துல்லாஹ் அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் நான்கு மாத இடைவெளிக்குள் அவரை அங்கிருந்து அகற்றிவிட்டு மீண்டும் ஒரு பெரும்பான்மை சமூகத்தவரை சேர்ந்தவர் நியமிக்கப் பட்டுள்ளார் . இந்த நியமித்ததைக் கண்டித்து பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான எம்.ரீ. ஹஸன் அலி பிரதிநிதி அமைச்சர் கீதாஞ்சன குணவர்தனவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்,
அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:

ஜனாப். அப்துல்லாஹ் அவர்கள் முறையான பதவி உயர்வு பெற்ற பின்னர் அப்பாறை மாவட்டத்தின் பிராந்திய முகாமையாளராக வந்ததனையிட்டு, மாவட்டத்திலுள்ள தமிழ் பேசும் மக்கள் திருப்தி கொண்டிருந்தனர். திடீரென அவர் வேறு இடததுக்கு மாற்றப்பட்தையிட்டு தமிழ் பேசும் மக்கள் என்னிடம் அதிருப்தி தெரிவித்ததுடன் உங்களது உடனடி கவனத்துக்குக் கொண்டுவருமாறு முறையிட்டுள்ளார்.
இவ்விடயம் பற்றி இலங்கை வங்கியின் உயர் அதிகாரிகள் பலரிடம் நான் தொடர்பு கொண்ட போதிலும் அவர்கள் எனக்கு அளித்த பதில்கள் திருப்தியளிக்கக் கூடியதாக இல்லை. அதனால் இவ்விடயத்தை உங்களது நேரடி கவனத்துக்குக் கொண்டு வருகின்றேன்.
ஜனாப் அப்துல்லாஹ் அவர்கள் பதவி ஓய்வு பெறும் தறுவாயில் இம்மாற்றம் நடந்துள்ளதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகின்றேன். வழக்கமாக ஓய்வு பெறும் ஒரு அதிகாரியை அவரது சொந்த மாவட்டத்தில் தப்பித்தவறி சிறுபான்மை சமூகத்தினர் யாராவது உரிய தகமையுடன் உயர் பதவிக்கு வந்தால் அவர்கள் மாற்றப்படுவதும், அல்லது அதிகாரமற்ற நிலமைக்குத் தள்ளப்படுவதும் மாமூலான விடயமாகும். இதனைத் தட்டிக் கேட்பதற்கு யாரும் முன்வருவதும் இல்லை.
இலங்கை வங்கியைப் பொறுத்தவரை அம்பாறை மாவட்டத்தில் சிறுபான்மை சமூகங்கள் வதியும் பகுதிகளில் 13 கிளைகளும் பெரும்பான்மையினர் வாழும் பகுதிகளில் 4 கிளைகளுமே இயங்குகின்றன. இது தவிர பதியத்தலாவையிலுள்ள கிளை நிர்வாக ரீதியாக ஊவா மாகாணணத்துடனும் தெஹிஅத்தக் கண்டியிலுள்ள கிளை பொலநறுவை மாவட்டத்துடனும் இணைக்கப்பட்டுள்ளன. இலங்கை வங்கிக்கு அதன் வருமானத்தையும் பணப்புழக்கத்தையும் தரும் கிளைகள் சிறுபாண்மை சமூகங்கள் வதியும் பிரதேசங்களில் தான் உள்ளன. அப்படியிருந்தும் மாவட்ட நிர்வாகத்திலுள்ள உயர் பதவியில் இதுவரை எந்த ஒரு தமிழ் பேசும் நபரும் அமர்த்தப்படவில்லை என்பது விசனத்துக்குரியதாகும். இவ்வாறான நியாயமான விடயங்களை வெளிப்படையாகக் கேள்விக்குட்படுத்துபவர்கள் இனவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு ஓரங்கட்டப்படுவதனால் எவரும் துணிந்து இவ்வாறான விடயங்களை சொல்வதற்கு தயங்குவது ஒரு துரதிஷ்டமான நிலையாகும் .
சேவையாற்ற அனுமதிப்பது பொதுவான ஒரு மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருவது நம் நாட்டில் உள்ள ஒரு சாதாரண விதியாகும். ஆனால் இந்த விடயத்தில் இவர் ஒரு தமிழ் பேசும் சிறுபான்மை இனத்தவர் என்பதற்காக இந்த மரபு மீறப்பட்டுள்ளதா என்பது தெளிவில்லை.
இவ்விடயத்தை நான் தங்களது கவனத்துக்குக் கொண்டு வருவது ஒரு இனவாத நோக்கில் அல்ல. முறையாக பதவி உயர்வு பெற்று தனது பதவியின் அந்திம காலத்தில் சொந்த மாவட்டத்தில் உரிய பதவியில் அமர்த்தப்பட்ட ஒரேயொரு சிறுபான்மை தமிழ் பேசும் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஏன் அப்பதவியில் தொடரக் கூடாது என்பதற்கான நியாயம் என்ன என்பதை விளங்கிக் கொள்வதற்காகவே இக்கடிதத்தை நான் தங்களுக்கு எழுதுகின்றேன். எனவே தயவு கூர்ந்து ஜனாப் அப்துல்லாவின் உரிமையை மீண்டும் நிலைநிறுத்தி அவரை எமது மாவட்டத்தில் கடமையாற்ற உதவுங்கள் என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் பேசும் மக்கள் மிகப் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்தில் அநேகமான அரச நிர்வாகங்கள் வலுக்கட்டாயமாக பெரும்பான்மை இனத்தவர்களின் தலை மீதே திணிக்கப்படுகின்றன. இந்த நிலமை நீடிக்குமானால் சிறுபான்மை சமூகத்தினர் தமது அடிப்படை உரிமைகளை படிப்படியாக இழந்து விடுவது தவிர்க்க முடியாததாகி விடும்.
அம்பாறை மாவட்டதிலுள்ள அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்பினர் மற்றும் சமூக மேம்பாட்டில் அக்கறையுள்ள பொது மக்கள் அனைவரும் இவ்விடயத்தை விழிப்புடன் மாற்றி அமைக்க முன்வர வேண்டும்.- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் – எம்.ரீ. ஹஸன் அலி பா.உ
இவ்வாறு அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment