கிழக்கு மாகாணசபை கலைக்கப்படுவதற்கு, கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணசபை பதவிக் காலம் முடிவடைவதற்கு
முன்னதாகவே கலைக்கப்பட்டு தேர்தல்களை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
எனினும், இந்தத் தீர்மானத்திற்கு கிழக்கு மாகாணசபையில் அங்கம் வகிக்கும்
ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
மாகாணசபை கலைப்பிற்கு எதிராக ஆளும் கட்சியினர் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளனர். அரசாங்கம் உரிய முறையில் நிதி ஒதுக்கீடுகளை செய்யாத காரணத்தினால் மக்களுக்கு சேவையாற்ற முடியவில்லை என ஆளும் கட்சி உறுப்பினர் புஸ்பராஜ் தெரிவித்துள்ளார்.
பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னதாக மாகாணசபைகளை கலைப்பதற்கு அந்தந்த மாகாணசபைகளில் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
எனினும், இம்மாத இறுதியில் மாகாணசபைகள் கலைக்கப்பட்டு எதிர்வரும் செப்டம்பர் மாதம் தேர்தல்களை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment