கிழக்கு மாகாணத்தில் அரசுடன் இணைந்து போட்டியிடுவதனால் முதலமைச்சர் வேட்பாளர் முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஒருவராக இருப்பார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்தவுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இக்கூட்டம் பொத்துவிலில் இடம்பெறவுள்ளது.
இதில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதா இல்லையா என இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
இந்த கலந்துரையாடலின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் சபை கூடி இறுதி முடிவு எடுக்கும்.
அதிக முஸ்லிம் வாக்காளர்கள் காணப்படும் கிழக்கு மாகாணத்தில் அரசுடன் இணைந்து போட்டியிடுவதானால் முதலமைச்சர் வேட்பாளர் முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஒருவராக இருப்பார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment