Thursday, February 21

சிரேஷ்ட ஆசிரியர் என்.எம்.எம்.நஸீர் வபாத்























அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருதை பிறப்பிடமாகவும் சம்மாந்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசிரியர் என்.எம்.எம்.நஸீர் இன்று புதன்கிழமை இரவு காலமானார்.கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக கல்முனை சாஹிராக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றியுள்ள இவர் சென்ற ஜனவரி மாதம் தொடக்கம் கல்முனை பற்றிமா கல்லூரியில் கடமையாற்றி வந்தார்.
கடந்த மூன்று வாரங்களாக சுகவீனமுற்று மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் வபாத்தாகியுள்ளார். தற்போது இவருக்கு வயது 52 ஆகும்.

சாய்ந்தமருது மார்கட் வீதியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மர்ஹூம் நைனா முஹம்மட் (மரைக்கார் மாஸ்டர்) அவர்களின் மூத்த புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் சாய்ந்தமருது உலமா சபையின் தலைவரும் சட்டத்தரணியுமான அஷ்ஷெய்க் என்.எம்.எம்.முஜீப், ஆசிரியர் என்.எம்.ஏ. மலிக்  அவர்கள் உட்பட ஒன்பது பேரின் மூத்த சகோதரருமாவார்.
தற்போது சம்மாந்துறை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மர்ஹூம் என்.எம்.எம்.நஸீர் அவர்களின் ஜனாஸா நாளை வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்பட்டு ஜனாஸா தொழுகை நடத்தப்படவுள்ளதுடன் சாய்ந்தமருது அக்பர் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment