கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரியந்த பத்திரண தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்று (21) இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இவரது தலையில் பலத்த காயங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
திருகோணமலை - ஆந்தம்குளம் பகுதியில் வைத்து நேற்று இரவு இவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபை தலைவர் ஆரியவதி கலப்பதியின் மகனால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உப்புவெலி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment