பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் தனது பண்முகப்படுத்தப்பட்ட
நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மருத்துவ உபகரணங்களை, நிந்தவூர்
மாவட்ட வைத்தியசாலைக்கு கையளிக்கும் நிகழ்வு வைத்தியசாலைக் கேட்போர்
கூடத்தில் இடம்பெற்றது.
மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர்.எம்.சீ.எம்.மாஹீர் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சீ.பைசால் காசீம் பிரதம அதிதியாகக்
கலந்து கொண்டு, மருத்துவ உபகரணங்களைக் கையளித்தார்.
இந்நிகழ்வில் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உபதலைவரும் தென் கிழக்குப்
பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.நசீர் அகமட், வைத்தியசாலை
அபிவிருத்திக் குழு உறுப்பினரும் HNB முகாமையாளருமான எம்.அன்வர்டீன் உட்பட
வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், அபிவிருத்தி
சபை உறுப்பினர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம்;
“தேசிய ரீதியில் நடைபெற்ற உற்பத்தித் திறன் போட்டியில் வெற்றி பெற்ற
இவ்வைத்தியசாவையின் வளர்ச்சிக்கு எல்லோரும் உதவ வேண்டும் என்பதற்காகவும்,
அதனை மற்றவர்களுக்கு நினைவுபடுத்துவதற்காகவுமே நான் அடிக்கடி இவ்வாறான
சிறிய உதவிகளைச் செய்து வருகிறேன்.
ஆனால் இவைகளால் தனிமனிதர்கள் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது.
ஓவ்வொருவரும் அவரவர் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் ஆர்வங் கொண்டுள்ளனர்”
எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment