Friday, March 8

முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளை உடைத்தெறிந்து மாணவ சமூகத்தை பாதுகாக்க வேண்டும்! முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கிழக்கு மாகாண பிராந்திய பொறுப்பதிகாரி அஸ்ஸெய்ஹ் ஜூனைட் (நளீமி)

4இஸ்லாமிய சிறார்களின் மத்தியில் நல்லொழுக்கத்தையும் நற்பண்புகளையும் வளர்ப்பதோடு நவீன சியோனிச சக்திகளுக்கு எதிர்கொடுக்கும் ஆற்றல்மிகு இளம் சமூகத்தை உருவாக்கும் சீரிய பணிக்காக அஹதியா பாடசாலை நாடு முழுவதிலும் இயங்கி வருகிறது. என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கிழக்கு மாகாண பிராந்திய பொறுப்பதிகாரி அஸ்ஸெய்ஹ் ஜூனைட் (நளீமி) தெரிவித்தார்.
அஹதியா பாடசாலையை மிகவும் தியாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் இஹ்லாஸ் உடன் மாணவர்களின் தேவையறிந்து அஹதியா ஆசிரியர்கள் செயற்பட வேண்டுமென அவர் சமீபத்தில் ஆயிஸா மகளிர் மஹா வித்தியாலயத்தில் நடைபெற்ற கந்தளாய் நூறூல் ஜன்னாஹ் அஹதியா பாடசாலையின் இஸ்லாமிய கலாச்சார விழாவில் பிரதம அதிதீயாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற் கண்டவாறு தெரிவித்தார்.
நூறூல் ஜன்னாஹ் அஹதியா பாடசாலையின் தலைவர் அமீர் சுல்தான் முஹம்மட் தாணீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் இன்று நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு சக்திகள் போட்டிபோட்டு இயங்குகின்றன அவைகளை உடைத்தெறிந்து எமது மாணவ சமூகத்தை பாதுகாக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
 
அஹதியா ஆரம்பித்த காலப்பகுதியில் 07 ஆசிரியர்களுடனும் 147 மாணவர்களுடனும் இருந்த இப் பாடசாலை  தற்போது 13 ஆசிரியர்களுடனும் 242 மாணவர்களுடனும் மௌலவியா மஸாஹினா ஜவாஹீர் அவர்களை அதிபராகக்கொண்டு  மிகச்சிறப்பாக இயங்குவது மகிழ்ச்சியை தருகிறது.
அஹதியா பாடசாலையின் கடந்து வந்த பாதையில் 2007ம் ஆண்டில் மாணவர்களின் இஸ்லாமிய கலாச்சார நிகழ்ச்சியும், பரிசளிப்பும் அதனைத் தொடர்ந்து 2008ல் ஓராண்டு புர்த்தியும், இஸ்லாமிய கலாச்சார விழாவும் 2009 ஆண்டு மாபெரும் இப்தார் நிகழ்ச்சியும், குர்ஆன் தமாம் வைபவமும் 2010 ஆண்டு மாணவர்களின் இஸ்லாமிய கலாச்சார விழாவும், அதே ஆண்டில் மாவட்ட மட்ட சுற்றுலா நிகழ்ச்சித் திட்டமும் 2012ம் ஆண்டு மாபெரும் இஸ்லாமிய கலாச்சார நிகழ்ச்சியும் அரங்கேற்றப்பட்டுள்ளதையும் நினைத்து தங்களது அஹதியாவை முன்மாதிரியாக பார்க்கின்றேன்.
அதேவேளை  அஹதியா பாடசாலையில் பரீட்சைத் திணைக்கத்தினால் நடத்தப்பட்ட இஸ்லாமிய சன் மார்க்க (அஹதியா) பாடசாலை இறுதி  சான்றிதழ் பரீட்சையில் இன்றுவரை பல மாணவர்கள் சித்தி பெற்று சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
4

3
2
1

No comments:

Post a Comment