கல்முனை பிரதேச செயலக விளையாட்டு விழா கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கல்முனை பிரதேச செயலக விளையாட்டு அதிகாரி ஏ.எம்.எம். றஸீன் தலைமையில்
நடைபெற்ற ஆரம்ப விழாவில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நௌபல் பிரதம
அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ், ஓய்வுபெற்ற மாவட்ட
விளையாட்டு அதிகாரியும், அம்பாறை மாவட்ட மெய்வல்லுனர் சங்க தலைவருமான
எம்.ஏ.நபார், கல்முனை பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர்
ஏ.எல்.ஜவ்பர் ஆகியோருடன் மற்றும் பல பிரமுகர்களும் விளையாட்டுக் கழகங்களின்
தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கல்முனை பிரதேச செயலக விளையாட்டு போட்டியில் இப்பிரதேசத்தைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட 20 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றுகின்றன.
No comments:
Post a Comment