Monday, March 18

தெயட்ட கிருல வுக்கு செல்லும் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் கவணத்திற்கு


Muslim-Ministers0
அம்பாறையில் மார்ச் 23-30 திகதி நடைபெறும் தயட்டகிருல்ல நிகழ்வில் கலந்து கொள்ளும் ஐனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அக்கரைப்பற்று, நுரைச்சோலையிற்குச் அழைத்துச் சென்று சவூதி அரசாங்கம் 2009 இல் நன்கொடையாக நிர்மாணித்த 500 வீடுகளையும் சுனாமியினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகின்றனர்.

மேற்கண்ட விடயமாக முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அம்பாறை மாவட்டத்தின் கறையோர பிரதேச பிரதேசத்தில் சுனாமியினால் பாதிக்கப்பட்டு 8 வருடங்களாக அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பினர் முஸ்லிம் அமைச்சர்களுக்கும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் முகவரியிட்டு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர்.
2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியின்போது இலங்கையில் ஆகக் கூடுதலான உயிர், உடமை இழப்புக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டதொரு மாவட்டம் அம்பாறை மாவட்டமாகும். இம் மாவட்ட பாதிக்கப்பட்ட மக்கள் தற்பொழுதும் அகதி முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

இம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரப் சவூதி அரசின் காலம்சென்ற இளவரசர் நைப் அவர்களை 2005 ஆம் ஆண்டு மக்காவில் சந்தித்தார். அச் சமயத்தில் பேரியல் அஸ்ரப் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசத்தின் முஸ்லிம்களின் உயிர் உடைமைகள் அழிவுகள் பற்றிய திட்ட அறிக்கையொன்றையும் சவுதி இளவரசர் னைபிடம் சமர்ப்பித்தார். இதன் பயணாக இளவரசர் சவூதி சரட்டபிள் நிறுவன அதிகாரிகளைக் தொடர்புகொண்டு  இந்தோனேசியா நாட்டில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தயார் படுத்திய கிங் அப்துல் அஸீஸ் வீடமைப்புத் திட்டத்தினை இடை நிறுத்தி இத்திட்டத்தினை இலங்கைக்கு வழங்கும் படி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அந்த வகையில் அக்கரைப்பற்று நுரைச்சோலையில் 50 வருடங்களுக்கு முன்பு முஸ்லிம்களுக்கு சொந்தமாண காணிகளை ஹிங்குராணை சீனித் தொழிற்சாலைத் திட்டத்தின் கீழ் சுவீகரிக்கப்பட்டது. அக் காணிகளையே முன்னர் அமைச்சர் பேரியல் அஸ்ரப் அடையாளம் கண்டு இத் திட்டத்தினை இங்கு நிர்மாணிப்பதற்கு வழிவகுத்துக் கொடுத்தார்.
இத் திட்டத்தில் 500 வீடுகள், வைத்தியசாலை, பாடசாலை, பள்ளிவாசல், சனசமுக நிலையம் போன்றவைகள் நிர்மாணிக்கப் பட்டடுள்ளது. இத் திட்டம் பூரணப்படுத்தப்பட்டு 3 வருடங்களாகிவிட்டது. சகல நிர்மாணங்களும் பாழடைந்துள்ளதுடன், வீடுகள் இடிந்து விழும் அளவுக்கு சேதமடைந்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசத்தில் மருதமுனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, கல்முனைக்குடி, ஒழுவில், பாலமுனை போன்ற பகுதிகளில் வீடுகளை நிர்மாணிக்க காணி இண்மையால் இத்திட்டம் அக்கரைப்பற்று- அம்பாறை வீதியில், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
2011 இல் சிஹல உறுமய கட்சி இத்திட்டத்திற்கு எதிராகவும் இக் காணி தீகவாபி பிரதேசத்தை அன்டிய பிரதேசம், இதில் வீடுகளை நிர்மாணித்து முஸ்லிம்களை குடியேற்றும் திட்டத்தினை மறைந்த அஸ்ரப் முன்னெடுத்த திட்டத்தினை பேரியல் அஸ்ரபும் முன்னெடுக்கின்றார் என   உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இத் திட்டத்தினை முஸ்லீம்களுக்கு மட்டும் பகிர்ந்தளிக்க முடியாமல் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இத் திட்டத்தினை பகிர்ந்தளிக்கும்போது சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களை அம்பாறை மாவட்டத்தில் அடையாளம் கண்டு அரச சட்ட மன்றம் ஊடாகவும் அம்பாறை அரச அதிபர் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகள் இணைந்து இவ் வீடுகள் பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும் எனத் தெரிவித்திருந்ததமையும் குறிப்பிடத்தக்கது.
அரசின் பங்காளிக் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது. அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் பெரும்பாண்மை வாக்குகளைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் அத்துடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் உள்ளனர். அதே போன்ற அமைச்சரவையில் அமைச்சர்கள் றவுப் ஹக்கீம், ஏ.எல்.எம். அதவுல்லாஹ் மற்றும் றிசாத் பதியுத்தீன், சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பசீர் சேகுதாவுத் ஆகியோர்கள் உள்ளனர். இவ் அரசியல்வாதிகள் இதுவரையிலும் இவ் வீடமைப்பு திட்டம் பற்றி ஜனாதிபதியிடமோ அல்லது தமது அமைச்சரவையிலோ கலந்து ஆலோசிக்கவும்மில்லை என அவரகள் தெரிவிக்கின்றனர்.
மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஸ்ரப், முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரப் ஆகியோர்  செய்த அபிவிருத்திச் சேவைகளில் 5  வீதமேனும் ஆட்சியில் இருக்கும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 3 வருடங்களாக இப் பிரதேசத்திற்கு எவ்வித அபிவிருத்தியையும் தற்போதைய அரசிடமிருந்து பெற்றுக் கொடுக்கவில்லையெனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆகவே தயட்ட கிருல்லைக்கு வரும் ஐனாதிபதியை அழைத்து இத்திட்டத்தினை காண்பித்து ஆகக் குறைந்தது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வீடுகளை நிர்மாணித்து தரவிட்டாலும்  சவூதி அரசின் தனவந்தர்கள் தமது வருடாந்த தர்ம நிதியினை சேகரித்து மனிதாபிமான உதவித்திட்டத்தின் கீழ் அளித்த இவ் வீடமைப்புத் திட்டததினை பெற்றுத் தரும்படி சம்பந்தப்பட்டவர்களை கேட்கின்றனர்.

No comments:

Post a Comment