Monday, March 18

மட்டக்களப்பில் விடுமுறை தினங்களில் தனியார் வகுப்புக்கள் நடத்துவோருக்கு எதிரான நடவடிக்கை

விடுமுறை தினங்களில் தனியார் வகுப்புக்கள் நடத்துவோருக்கு எதிரான நடவடிக்கை


மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தினுள் பூரணை மற்றும் விடுமுறை தினங்களில் முழுமையாக தனியார் கல்வி செயற்பாட்டினை இடைநிறுத்தவும், ஞாயிறு விடுமுறை தினங்களில் பிற்பகல் 2 மணிவரை தனியார் கல்விச் செயற்பாட்டினை இடைநிறுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை மீறி செயற்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தினுள் பூரணை மற்றும் விடுமுறை தினங்களில் முழுமையாக தனியார் கல்வி செயற்பாட்டினை இடைநிறுத்தவும், ஞாயிறு விடுமுறை தினங்களில் பிற்பகல் 2 மணிவரை தனியார் கல்விச் செயற்பாட்டினை இடைநிறுத்தவும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு இவ் விதிமுறை அமுல்படுத்தப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது இவ் விதிமுறையை மீறி சில தனியார் கல்வி நிறுவனங்கள் செயற்படுவதால் அறநெறிக் கற்றல் நடவடிக்கைகளிலும், கிறிஸ்தவ தேவாலயங்களில் மத அனுஸ்டானங்களில் மாணவர்கள் கலந்து கொள்வதற்கு செல்லமுடியாத நிலை உள்ளதாக சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அத்துடன் தற்போது கிறிஸ்தவர்களின் தவக்காலம் அனுஸ்டிக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் இச் செயற்பாடானது மாணவர்கள் தமது சமய செயற்பாடுகளில் ஈடுபட இடையூராக அமைவதாகவும் உள்ளதால் சகல தனியார் கல்வி நிலைய நிர்வாகிகளும் மாணவர்களும் தத்தமது மத அனுஸ்டானத்தில் பங்கு பற்றுவதற்கும், அறநெறி வகுப்புகளில் கலந்து கொள்வதற்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வண்ணம் ஞாயிறு தினங்களில் பிற்பகல் 2 மணிவரை தனியார் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு தனியார் கல்வி உரிமையாளர்களுக்கு அறிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் சமய அனுஸ்டானங்கள் மற்றும் அறநெறிக் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூரை ஏற்படுத்தும் வண்ணம் செயற்படும் தனியார் கல்வி நிறுவனங்கள் இவ்விதிமுறையை மீறும் பட்சத்தில் பொலிசார் மூலம் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவது தவிர்க்கமுடியாதது.

மேற்படி தீர்மானத்தினால் விடுமுறை நாட்களில் பொற்றோர்கள் தமது பிள்ளைகளுடன் விடுமுறையினை களிக்கும் வாய்ப்புகளும் அதிகரிக்கப் படுகின்றது என்பது சிறந்த விடயமாகும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment