Tuesday, March 19

கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு மாகாணப் பேரவை மண்டபத்தில் நடைபெற்றது


கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று தவிசாளர் கௌரவ ஆரியவதி கலபதி தலைமையில்  மாகாணப் பேரவை மண்டபத்தில் மு.ப.90.30க்கு  நடைபெற்றது .


இவ் அமர்வின் போது கௌரவ உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அவர்களினால் தனிநபர் பிரேரனை ஓன்று முன்வைக்கப்பட்டது.   கௌரவ உறுப்பினர் கிழக்குமாகாண மக்களின் காணிப்பிரச்சினையானது தொடநர்ந்தேச்சியாக இடம் பெற்று வரும் இந்நிலையில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேசத்திற்குட்பட்ட பல காணிகள் பாதுகாப்பு படையினரால் பலவந்தமாக அபகரிக்கப்பட்டு வறுகின்றது. இதனால் கடந்த யுத்தத்தினால் தமது உயிர்களையும் உடமைகளையும் இழந்த மக்களுக்காக எஞ்சியிருக்கின்ற குடியிருப்பு மற்றும் தேட்டகாணிகள் பாதுகாப்பு படையினரால் பலவந்தமாக அபகரிக்கப்பட்டு வருவதால் ஏழை  மக்களின் எதிர்கால இருப்பு பற்றி இன்று கேள்விக்குறியாகியுள்ளது. எனவே அவர்களுடைய காணிகள் மீளவும்  அவர்களிடம் ஒப்படைக்கப்படவேன்டும் என இந்த கௌரவமான சபையை கேட்டுக் கொள்கின்றேன் என அவர் இந்த பிரேரனையை முன்வைக்க எதிர் கட்சியின் பிரதி வாதத்தின் பின்  சபை 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது  மீனடும் 10.15. மணியளவில்  கூடிய சபை எதிர் வரும் 9.4.2013 மீன்டும் கூடும் என தவிசாளர் கூறினார்

No comments:

Post a Comment