கிழக்கில் நேற்று வீசிய பலத்த
காற்றினால் கல்முனை,சாய்ந்தமருது, மாளிகைக்காடு, பிரதேச கடலில் நிறுத்தி
வைக்கப்பட்டு மீன்பிடிப் படகுகள் அடித்துச் செல்லப்பட்டு கரை
ஒதுக்கப்பட்டன. இதனால் கல்முனை பிரதேசத்தில் நான்கு படகுகள்
சேதத்துக்குள்ளானதுடன் ஒரு படகும், தோனியும் கடலில் முழ்கியதுடன்
மீனவர்களின் வாடிகளும் சேதமடைந்தன.
மேலும் சூறாவளி அபாய இன்னும்
நீங்கவில்லை, இலங்கையை கடந்து செல்ல நான்கு நாட்கள் எடுக்கும் எனவும்
மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என வானிநிலை அவதான நிலையம்
அறிவித்துள்ளது.
இதனை அடுத்து அம்பாறை மாவட்ட
ஆள்கடல் மீனவர்களின் படகுகளை பாதுகாப்பாக ஒலுவில் துறைமுகத்தில் நிறுத்தி
வைக்க திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின்
நடவடிக்கையை அடுத்து படகுகள் அனைத்தும் ஒலுவில் துறைமுகத்தில் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment