Tuesday, June 4

கல்முனை வலய பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் கல்முனை ஸாஹிராவுக்கு 30 முதலிடங்கள்


கல்முனை கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் கல்முனை ஸாஹிராக்கல்லூரி 30 முதலிடங்கயும் 8 இரண்டாம் இடங்களையும் 7 மூன்றாம் இடங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
கடந்த வியாளக்கிழமை ( 30) நிந்தவுர் அல் அஸ்றக் தேசிய பாடசாலையில் இடம்பெற்ற இறுதி தின விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாண ஆளுணர் ரியர் அட்மிரல் மொஹான் வியஜவிக்ரம பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கான கிண்ணங்களை வழங்கி வைத்தார்.

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை தமிழ் , கல்முனை முஸ்லிம் , சாய்ந்தமருது , நிந்தவுர் , காரைதீவு ஆகிய கோட்டத்திற்குட்பட்ட 63 பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்ற மேற்படி விளையாட்டுப் போட்டியில் கல்முனை ஸாஹிராக்கல்லூரி மாணவர்கள் கிறிக்கட் , மேசைப்பந்து , செஸ் ஆகிய பெரு விளையாட்டுக்களில் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டதுடன் 17 வயதுப்பிரிவில் 200 மீற்றர் , 110 மீற்றர் தடைதாண்டல் , 100 மீற்றர் ஆகிய மூன்றிலும் முதலாம் இடம்பெற்று எம்.ஏ.எம்.றஸ்பாஸ் என்ற மாணவனும்  21 வயதுப்பிரிவில் 100 , 200 , 400  மீற்றர் ஓட்டப்போட்டிகளில் முதலாம் இடங்களைப் பெற்று எம்.எச்.எம்.முஸ்பீக் என்ற மாணவனும் தனிநிலை சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன் 17 , 19 ,21 வயதுக்கட்பட்ட 4 x 100 , 4 x 400  அஞ்சலோட்டப் போட்டிகளில் முதலாம்  இடங்களைப் பெற்று அஞ்சலோட்ட சம்பியன்களாகவும் மெய்வல்லுனர் சம்பியன்களாகவும் கல்முனை ஸாஹிராக்கல்லூரி ( தேசிய பாடசாலை ) தெரிவு செய்யப்பட்டது.
இப்பரிசளிப்பு நிகழ்வு கல்முனை வலய கல்வி பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாஸிம் தலைமையில் இடம்பெற்ற போது கிழக்கு மாகாண ஆளுணர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார கௌரவ அதிதியாகவும் வலய கல்வி பணிப்பாளர்கள் , பிரதி கல்வி பணிப்பாளர்கள் , உதவி கல்வி பணிப்பாளர்கள் , ஆசிரிய ஆலோசகர்கள் , பாடசாலைகளின் அதிபர்கள் , ஆசிரியர்கள் மாணவரகள் பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டுப் போட்டியில் பலதுறையிலும் சம்பியன்களாக கல்முனை தமிழ் கோட்டம் தெரிவு செய்யப்பட்டது. 


No comments:

Post a Comment