அரச தரப்பு பாராளுமன்ற குழுக்கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில்
ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 17.06.2013 இடம்பெற்றது இதன்போது அம்பாறை
மாவட்ட கரையோர பிரதேச மீனவர்கள் எதிர் கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் ஜனாதிபதியின்
கவனத்திக்கு கொண்டுவந்துள்ளார்.
இம்மாவட்டத்தில் ஆழ்கடல் மீனவர்கள் எதிர் கொண்டுள்ள பிரச்சினைகள்
தொடர்பாகவும் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு
கொண்டுவரப்பட்டது.இதையடுத்து மீன்பிடி அமைச்சர் ராஜித செனாரத்னவிற்கு
ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமைய ஒலுவிலில் நிர்மாணிக்கப்பட்டுள்ள
மீனவர் துறைமுகத்தை எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் திறப்பதற்கான சகல
பூர்வாங்க நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அமைச்சருக்கு
உத்தரவிட்டுள்ளதாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால்
காசிம் தெரிவித்தார்.
இதேவேளை ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு தொடர்பாகவும்,
இதனால் இப்பிரதேச மக்கள் அனுபவித்துவரும் பிரச்சினைகள் தொடர்பாகவும் நீதி
அமைச்சர் ரவூப் ஹகீம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.இது
விடயமாகவும் ஜனாதிபதி கவனம் செலுத்துவதாக தெரிவித்ததாக திகாமடுல்ல மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment