Monday, June 17

பொதுபல சேனாவுக்கு எதிராக நிச்சயம் வழக்கு தொடர்வேன் - ஆஸாத் சாலி

இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துக்களை கூறி இன ஐக்கியத்திற்கு சவால் விட்டு, மாத மோதலை உருவாக்க முயற்சிக்கும் பொதுபல சேனாவுக்கு எதிராக நிச்சயம் வழக்கு தொடரப்படுமென ஆஸாத் சாலி குறிப்பிட்டார். ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு இதுதொடர்பில் கருத்துக்கூறிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பொதுபல சேனாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சட்டத்தரணிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். அதற்கான ஒளி,ஒலி ஆதாரங்கள் திரட்டப்படுகின்றன. மழுமைய ஆதாரங்களுடனே நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம். பிரதான 3 முக்கிய விவகாரங்களை மையப்படுத்தியே பொதுபல சேனாவுக்கு எதிரான வழக்கு தாக்கல் செய்யப்படும்.
மேலும் பொதுபல சேனாவின் இனவாத நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்தும் அவதானித்து வருகிறோம். தற்போது முஸ்லிம் பிரதேசங்களிலும் பொதுபுல சேனா தலைகாட்ட முயல்கிறது. கல்முனையில் பொதுபல சேனாவின் கூட்டத்தை தடுத்துநிறுத்த ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகளுடனும் தொடர்புகைள ஏற்படுத்தினேன. இதன்காரணமாக அம்பாறைக்கு பொதுபல சேனாவின் கூட்டம் இடமாற்றப்பட்டது.
ஆனால் ஹரீஸ் எம்.பி.யோ ஊடகங்களையும், மக்களையும் தவறாக வழிநடாத்தியுள்ளார். அவரால்தான் பொதுபல சேனாவின் கூட்டம் அம்பாறைக்கு இடமாற்றப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இது பொய். இதற்கு முன்னரும் ஹரீஸ் எம்.பி. பொய் சொல்லியுள்ளார். பொய் சொல்லியே அவர அரசியல் செய்கிறார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் பொய் சொல்கிறார். தற்போது முஸ்லிம் காங்கிரஸ் பொய்யர்களின் கூடாரமாக போயுள்ளது. இவை எல்லாவற்றையும் அம்பலப்படுத்தவே நான் கிழக்கு மாகாணம் சென்று அங்குள்ள முஸ்லிம்களை சந்திக்கவுள்ளேன் என்றார்..!

No comments:

Post a Comment