கல்முனை
ஆதார வைத்தியசாலை அத்தியட்சகராக இருந்து அவ்வைத்தியசாலையின்
அபிவிருத்திக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தவரும் தமிழ் மக்களுக்கு
கொடுமைகளையும் அநீதிகளையும் செய்து வந்தவரான ஜாபீர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
ஜபீரை இடமாற்றம் செய்ய வேண்டும் என கல்முனை
ஆதார வைத்தியசாலை ஊழியர்களும் அப்பிரதேச பொதுமக்களும் நீண்டகாலமாக
ஆர்ப்பாட்டங்களை செய்து வந்தனர். கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு செல்லும்
தமிழ் பெண்கள் மீதும் வைத்தியசாலையில் பணிபுரியும் தமிழ் பெண் ஊழியர்கள்
மீதும் பாலியல் தொந்தரவுகளை ஜபீர் செய்து வந்தார் என அப்பிரதேச மக்கள்
குற்றம் சாட்டியிருந்தனர்.
இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்
கடமையாற்றிய காலத்திலும் மரண விசாரணைகளில் இராணுவத்தினருக்கு சார்பாகவே
அறிக்கைகளை சமர்ப்பித்து வந்தார்.
மட்டக்களப்பு நகரில் வெசாக் தினத்தின் போது
நடந்த குண்டு வெடிப்பை அடுத்து இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கி
பிரயோகத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டனர்.
இந்த மரணங்கள் குண்டுவெடிப்பினால் நிகழ்ந்ததாக அப்போது ஜபீர் அறிக்கை
கொடுத்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment