கல்முனை வீதி போக்குவரத்து பொலிஸ் பிரிவும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையும் இணைந்து கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் ஒழுக்காற்று சபையின் ஒத்துழைப்போடு ஒழுங்கு செய்திருந்த ” பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் ” எனும் தொனிப்பொருளிலான மாணவர்களுக்கு விழிப்புட்டும் கருத்தரங்கொன்று இன்று கல்லூரி எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.
உலக வீதிப் பாதுகாப்பு தினத்தையொட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மேற்படி நிகழ்வில் பிரதான வளவாளர்களாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றாநோய் பிரிவின் பொறுப்பதிகாரி டாக்டர் சாலி சாபி , கல்முனை வீதிப்போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி எம்.ரீ.எம்.நஜீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி பிரதி அதிபர் ஏ.ஏ.கபுர், ஒழுக்காற்று சபையின் தலைவர் எம்.எஸ்.எம்.நுபைஸ் , பிரதி தலைவர் யு.எல்.எம்.இப்றாஹிம் ,கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி சிரேஷ்ட ஆசிரியர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் , கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்பணிமனையின் தொற்றாநோய் பிரிவின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோஸ்தர் கே.யோகேஸ்வரன் உட்பட பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment