கல்முனை கடற்கரைப்பள்ளி வீதியின் நிர்மாண பணிக்கான அங்குரார்ப்பண
நிகழ்வின்போது திரைநீக்கம் செய்யப்பட்ட வீதியமைப்பு நினைவுப்படிகம் மற்றும்
பெயர்ப்பலகை இனந்தெரியாதோரினால் சேதமாக்கப்பட்டுள்ளது.
கடற்கரைப்பள்ளி வீதியினை காபெட் வீதியாக நிர்மாணிப்பதே பொருத்தம் என
பெரும்பாலோரினது கருத்தாகும். அதற்கான நியாயமான காரணங்களையும் அவர்கள்
தெரிவிக்கின்றனர்.
மேலும் கடற்கரைப்பள்ளி வீதியினை காபெட் வீதியாக நிர்மாணிப்பதற்கு கடந்த
மாகாண சபை ஆட்சியில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ஜவாத்
முன்மொழிவினை செய்தாகவும் அதற்கான அனுமதியினை மாகாண வீதி அமைச்சு
வழங்கியதாகவும் தெரியவருகின்றது. இவ்வாறிருக்கையில் இவ்வீதி திடீரென
கொங்கிறீட் வீதியாக மாற்றப்பட்டு நேற்று அங்குரார்ப்பண நிகழ்வு கிழக்கு
மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.