நாம் சண்டை பிடித்துக்கொண்டிருக்கும் விடையங்களும், சண்டை பிடிக்க வேண்டிய விடையங்களும்.
உள்ளூராட்சி சபை தேர்தல் முடிந்த கையோடு, யார் யாருடன் சேர்ந்து ஆட்சியமைப்பது, யார் வென்றது தோற்றது,எந்த ஊர் வென்றது என்று நாம் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கிறோம். நாம் நமது கவனயீனத்தின் காரணமாகவும், போட்டி அரசியலின் காரணமாகவும் இழந்தவை அதிகம். இரட்டைத்தோகுதியில் இரண்டு உறுப்பினருமே ஒரு கட்சிக்கே செல்லும் சட்ட ஏற்பாடு நமது தலைமைகள் விட்ட தவறாகும். மேலும் உ.சபைகளில் பெண்களின் Active participation என்பது முஸ்லிம் சமூகத்தில் மிக குறைவாகவே காணப்படுகிறது. எனவே 25% பெண்கள் ஒதுக்கீடு என்பது மற்ற சமூகத்தை விட முஸ்லிம் சமூகத்துக்கு அனுகூலமான ஒன்றாக கருதமுடியவில்லை, சட்டத்தில் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக பெண்கள் நியமிக்கப்படுகின்றனர், இது உள்ளூராட்சி சபைகளில் inactive membership களை கொண்டு வரும். இவை நாம் சட்ட இயற்றல்களின்போது, கவனயீனமாக இருந்து இழந்தவைகள். இனி... வட்டாரங்களுக்கான எல்லைப்பிரிப்புகளின் போது, நாட்டின் பல பகுதிகளில் பெரும்பான்மையினர், நமது கவனயீனத்தை பயன்படுத்தி அவர்களது தேவைகளுக்கேற்றவாறு தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் சிதைக்கப்பட்டு, அவர்களுக்கேற்றவாறு வட்டாரங்கள் உருவாக்கப்பட்டன. இனிவரும், மாகாண சபை தேர்தலுக்கான எல்லைப்பிரிப்பு எதிர்காலத்தில் இடம்பெற இருப்பதால், இதில் அரசியல் தலைமைகள், சிவில் அமைப்புகள், ஜம்இய்யதுல் உலமா போன்றவை மிக கூடிய கவனம் செலுத்தி, இனப்பரம்பலுக்கேற்றவாறு எல்லைப்பிரிப்பு செய்வதன்மூலம், நமது மாகாணசபை பிரதிநிதித்துவத்தையும், இருப்பையும் உறுதிப்படுத்தவேண்டியது காலத்தின் தேவையாகும். இதிலும் நாம் உட்கட்சி சண்டை பிடித்துக்கொண்டு, கவனயீனமாக இருப்போமானால், அது ஒரு வரலாற்றுத்தவறாக அமையும்.