ஒரு நேரடி ரிப்போர்ட்
இலங்கையில் 2004இல் இடம்பெற்ற சுனாமி பேரனர்த்தத்தில் அதிகமாகப் பாதிக்கப்பட்டது கிழக்கு மாகாணமே. அதிலும் குறிப்பாக மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள மக்களே அதிகமாகப் பலியானார்கள். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாகினர். அவர்களில் பலர் மீள்குடியேறிவிட்டனர். ஆனாலும், இன்னும் சில குடும்பங்கள் தற்காலிக கூடாரங்களிலேயே தமது காலத்தைக் கழித்து வருகின்றனர்.
சாய்ந்தமருதில் மட்டும் சுனாமி அனர்த்தத்தில் 2010 பேர் பலியாகினர். இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக்கப்பட்டனர். அண்மையில் சாய்ந்தமருதுக்கு விஜயம் செய்தபோது இவ்வாறானதொரு அகதிமுகாக்குச் சென்றிருந்தோம். சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தின் பின்னால், கறைவாகுப்பற்று வயற்காணியருகில் ஆற்றுக்கு மாந்தரமாக இந்த அகதிமுகாம் அமைக்கப்பட்டிருந்தது....
கரைவாகுப்பற்று காணியில் "பொலிவேரியன் கிராமம்' என்றொரு மாதிரிக் கிராமம் உருவாக்கப்பட்டு, அங்கு சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். ஆனாலும், இன்னும் சுமார் 30 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படாமல் அந்த அகதிமுகாமில் இருக்கின்றன.
தகரம், 'பிளைவூட்' பலகையினால் அந்த தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நாங்கள் அங்கு விஜயம் செய்தபோது அதிகமானோரை அங்கு காணமுடியவில்லை. "இண்டைக்கு கரண்ட் போயிட்டு. இந்தக் கூடாரத்துக்குள்ள கடும் வெக்கயாக் கெடக்கு, அதான் பக்கத்துல காத்து வாங்கப் போனாம்' என்று கூறிக்கொண்டு எம்மிடம் வந்தார் அன்சார்.
அவர் மேலும் தங்களது ஆதங்கங்களை எம்மிடம் கொட்டித் தீர்த்தார். "நான் நாளாந்தம் கூலித்தொழில் செய்றன். எனக்கு 35 வயசாகுது. எங்கட குடும்பத்துல மூணு ஆம்புளயல், ரெண்டு பொம்புளயல் இரிக்காம். எங்கள இங்க ஆறு மாசத்துக்குத்தான் இங்க இரிக்கச் சொன்னாங்க. ஆனா, இப்ப ஆறு வரிசம் முடிஞ்சி, ஏழு வருசமாக இங்கதான் இரிக்கோம். இங்க ஆத்துக்குப் பக்கத்துல இரிக்கிறதால புழு, பூச்சிகள், பாம்பு, நொளம்புக்கடிக்குள்ளதான் நாங்க வாழுறம். புள்ளயளுக்கு ஒழுங்கான பாதுகாப்பு வசதிகளும் இல்ல.
ஆறு மாத்தைக்குள்ள வீடு தாறம் எண்டு சொன்னவங்க, கிட்டத்துலதான் மீன்பிடித்துறை அமைச்சில அடிக்கல் நாட்டிட்டுப் போனாங்க, "இபார்ட்'' நிறுவனத்தால வீடு கட்டுறதாச் சொன்னாங்க. இப்ப அடிக்கல் நாட்டி ஒரு மாசமாகுது ஒண்டையும் காணல்ல' என்றார் ஏமாற்றமடைந்த தொணியில்...
தங்களுடைய கூடாரங்கள் கடந்த வெள்ள அனர்த்தத்தினால் இடிந்துபோய் விட்டதாகக்கூறி எம்மிடம் முறையிட்டார். அவரது தற்காலிக கூடாரத்திலுள் எம்மை அழைத்துச்சென்று காட்டினார். அங்கும் இங்குமாக பொத்தல்களுடன் கூடிய தரையும், பிய்ந்துபோன வேலிகளுக்கும் மத்தியில் இரு குழந்தைகள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தன. பார்த்த எங்களுக்@க கண்ணீர் எட்டிப்பார்த்தது. பாதியளவு இடவசதி இல்லாமல் அன்சாரினுடைய மகள், வீட்டு முற்றத்தில் கல்லை அடுக்கிவைத்து அதில் சமைத்த காட்சியையும் எம் கண்கள் காணத்தவறவில்லை.
"இப்ப அடிக்கல் நாட்டின இடத்துல அவசரமா எங்களுக்கு வீட கட்டித் தந்தா நல்லம். எங்கட டீ.எஸ். சொல்லியிருக்கார், சீக்கிரமா வீடு கட்டித்தருவோம் எண்டு. நாங்க எல்லாரும் அவர்ர பேச்சத்தான் நம்பியிருக்கோம்' என்றார் அங்கு வசிக்கின்ற அப்துல் முனாபிர்.
"எனக்கு ரெண்டு பொம்ளப் புள்ளயல் இரிக்கி. அவங்க ரெண்டு பேரும் ஸ்கூல் போறாங்க. அவங்களுக்கு இங்க சரியான பாதுகாப்பு வசதிகள் இல்ல. இங்க இருந்து ஸ்கூல் போறது ரொம்ப கஷ்டம்' என்று முனாபிர் வேதனையுடன் தெரிவித்தார்.
தற்போது இவர்களுக்குத் தேவையான மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இங்கு நேரடியாகவே மின்சாரம் வழங்கப்படுகிறது. தகட்டுக் கூடாரத்திற்கென எந்தவிதமான பாதுகாப்பு வசதிகளும் இல்லை. தங்களது கூடாரத்தினை திருத்தியமைக்க தடிகள், தகரம், சீமெந்து என்பனவும் கொடுத்ததாக அங்கு வாழ்கின்ற ஒருவர் தெரிவித்தார்.
"போன வெள்ளத்தால கூடாரம் ஓட்டையும் ஒடசலுமா இரிக்கி. நாங்க அதயெல்லாம் பொத்தல்போட்டுக்கொண்டு வாழும். கறையான், கடியன், பூராண், பாம்பு, புழு,பூச்சியெல்லாம் இங்க வருது. அத எங்களால கட்டுப்படுத்த ஏலாது' என்று முனாபிர் சொல்லும்போது அவரது முகத்தில் சோகம் தழும்பியது.
அகதிமுகாமில் வாழும் இவர்கள் கடந்த வெள்ளத்தின்போது இரண்டாவது தடவையாக மீண்டும் அகதிகளாக இடம்பெயர்ந்து வாழ்ந்த கதையைக் கேட்டபோது அவர்களது சோகத்தை எம்மால் ஜீரணிக்கமுடியாமல் போனது.
"சுனாமி அடிச்சி 7 வரிசமாச்சி. ஆனா, எங்கள பகடக் காயாகக் காட்டி இங்க உள்ள அரசாங்கமும் உத்தியோகத்திர்களும் எமாத்துறாங்க. எலக்ஸன் வந்தா நாங்க சிறுநீர் கழிக்கிற இடத்தில வந்து, காக்கா... மச்சான்... நாங்க எம்.பி.யாகனும். நம்மட பிரச்சினய நாமதான் தீர்க்கணும் எண்டு வோட்டுக் கேட்டுப்போன எந்த எம்.பி.யும், மினிஸ்ட்டரும், வெண்டதுக்குபொறகு இந்தப்பக்கம் வந்து எட்டிப் பாக்குறத இல்ல' என்று தனது மனக்குமுறலை எம்மிடம் கொட்டித்தீர்த்தார் அங்கு வசிக்கின்ற கூலித்தொழில் செய்யும் மன்சூர்.
"இங்கு வந்து அவர்களால் ஒரு நாளைக்காவது இருக்க முடியுமா' என்று தனது தனிப்பட்ட கருத்தை அரசியல்வாதிகளிடம் முன்வைத்தார் அவர்.
"இங்க இண்டைக்கு இரவைக்கு எண்டாலும் வாழக்கூடிய கொமருகள் இருக்குது. ஆனா, கலியாணம் முடிக்க வீடு இல்ல. வீடு இல்லாம எங்க குடும்பம் நடத்துற...? நாங்க மக்கள்ர பிரச்சினய தீர்ப்பாங்க எண்டு வோட்டுப் போட்டா, அவங்க அங்க பலாக்கன்று நாட்டுறாங்க, இங்க மாங்கன்று நாட்டுறாங்க. லிபியாவுக்கு, ஜப்பானுக்கு, கனடாவுக்கு போறாங்க. நாங்க இவங்களுக்கு இதுக்கு வோட்டுப் போடல்ல. ஒரு வோட்டுட பெறுமதி எங்களுக்குத்தான் தெரியும்' என்றபோது அவரது கண்கள் கலங்கின.
"இங்குள்ள எந்த அரசியல்வாதியும் மக்களை நேரடியாகப் பார்த்து இவர்களது பிரச்சினைகளைத் தீர்க்க முன்வருகிறார்கள் இல்லை' என்ப@த அங்குள்ள மக்களின் ஆதங்கமாக இருந்தது. தாங்கள் இருக்கின்ற ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம்கூட இவர்கள்மீது அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. அங்கு விஜயம்செய்த அமைச்சர் றிசாத் பதியுதீன் "நீங்கள் சுனாமி அடித்து இப்போதும் அகதிமுகாமில் இருக்கிறீர்கள் என்பதைக் கேட்கும்போதே எனக்கு வெட்கமாக இருக்கின்றது. இங்குள்ளவர்கள் என்ன செய்கிறார்கள்' என்று கேட்டதாகவும் மேலும் தெரிவித்தார்கள்.
இவர்கள் தங்களது நிரந்தர வீட்டுக் கோரிக்கைகளை முன்வைக்க கால்நடையாக ஜனாதியிடம் செல்ல முயற்சித்தபோது, "உங்களுக்கு வீடுகள் விரைவில் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்'' என்ற சாய்ந்தமருது பிரதேச செயலாளரின் வேண்டுகோளை ஏற்று அமைதியாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸை தொடர்புகொண்டு கேட்டபோது; "ஆரம்பத்தில் வெனிசூலா நாட்டினால் எ+3 தொடர்மாடி வீடுகளை அமைக்க 400 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தனித்தனி வீடுகள் அமைக்க அதிகளவான காணிகள் தேவைப்பட்டதால், கரைவாகுப்பற்று வயல் காணியை நிரப்ப எதிர்பார்த்ததைவிட அதிகளவான நிதி செலவாகியது. இதனால், 200 அளவிலான வீடுகளையே கட்ட முடிந்தது. அதன்பின்னர் மீன்பிடித்துறை அமைச்சுன் இபார்ட் நிறுவனம் இணைந்து 90 வீடுகளைக் கட்டிக்கொடுத்தது.
இன்னும் 300 வீடுகள் அளவில் கட்ட வேண்டியிருக்கின்றது. மீண்டும் "இபார்ட்'' நிறுவனத்தால் 120 வீடுகளுக்கு தற்பொழுது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுப்பது அல்லது அவர்களது இடங்களிலேயே வீடுகளைக் கட்டுவற்கான நிதியைக் கொடுப்பதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளது' என்று தெரிவித்தார்.
ஏழு வருடங்களாக "அகதிகள்' என முத்திரை குத்தப்பட்ட இவர்களது இன்னல் வாழ்க்கை இன்னமும் தற்காலிக கூடாரங்களுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றது. அடிக்கல் நாட்டுவதும், வாக்குறுதிகளை அள்ளி வீசுவதிலும் சம்பந்தப்பட்டவர்கள் குறியாக இருக்காமல் இம்மக்களது பிரச்சினைகளை தீர்க்க முன்வரவேண்டும். வீடுகளுக்கு அடிக்கல் நாட்டிய நிலையில் அங்குள்ள மக்கள் இன்று கட்டித்தருவார்கள், நாளை கட்டித்தருவார்கள் என காத்திருந்து காத்திருந்து ஏமாற்றத்தைய சந்தித்துள்ளனர். எனவே, அடிக்கல் நாட்டப்பட்ட வீடுகளை உடனை கட்டிக்கொடுக்க உரியவர்கள் முன்வரவேண்டும்.

No comments:
Post a Comment