அம்பாறை மாவட்டத்தில் வீட்டுத்தோட்ட மரக்கறி செய்கையை ஊக்குவிக்க உலக உணவு விவசாய ஸ்தாபனம் கிழக்கு மீள்எழுச்சி திட்டத்தின் கீழ் 20 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 10 ஆயிரம் பேருக்கு இலவசமாக மரக்கறி விதைகளை வழங்கி வருவதாக உலக உணவு விவசாய ஸ்தாபன அம்பாறை மாவட்ட இணைப்பாளர் பி.மார்க்கண்டு தெரிவித்தார்.
மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத் தர்களினால் தெரிவு செய்யப்பட்ட 10 ஆயிரம் வீட்டுத்தோட்ட மரக்கறி செய்கையாளர்களுக்கு தலா 700 ரூபா பெறுமதியான பாகல், தக்காளி, மிளகாய், பயிற்றை, கீரை ஆகிய 5 வகையான விதைகளை பிரதேச செயலக ரீதியாக வழங்கி வருகின்றதாக தெரிவித்தார்.
இதேவேளை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 3 ஆயிரத்து 52 மேட்டு நிலபயிர் செய்கையாளர்களுக்கு கால் ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் செய்வதற்காக 900 பேருக்கு சோளம், 435 பேருக்கு பாசிப்பயறு, 67 பேருக்கு உழுந்து, 1500 பேருக்கு கௌவ்பி, 150 பேருக்கு நிலக் கடலைகளுக்கான விதைகளை இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக உலக உணவு விவசாய ஸ்தாபன அம்பாறை மாவட்ட இணைப்பாளர் பி.மார்க்கண்டு தெரிவித்தார்
No comments:
Post a Comment