Tuesday, July 12

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் தபால் மூல வாக்களிப்பு


கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் தபால் மூல வாக்களிப்பு


July 12,2011
இம்மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலுக்குரிய தபால் மூல வாக்களிப்பு இன்று கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் இடம்பெற்றது. காரைதீவு பிரதேச சபை தேர்தலில் பிரதேச சபைக்கு 5 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 11,700 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 

இலங்கை தமிழரசுக்கடசி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய 5 அரசியல் கட்சிகளும் இரண்டு சுயேட்சை குழுக்களும் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. 

கடந்த 2006 ஆம் ஆண்டு முதன்முதலாக நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் காரைதீவு பிரதேச சபைக்கு இலங்கை தமிழரசு கட்சி 6059 வாக்குகளைப்பெற்று 4 ஆசனங்களையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய கட்சி 2239 வாக்குகளைப்பெற்று 1 ஆசனத்தையும் கைப்பற்றி இருந்தன. 

இம்மாதம் 23 ஆம் திகதி காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வாக்காளர்கள் வாக்களிபபதற்கென 12 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தலகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 


No comments:

Post a Comment