சம்மாந்துறை கல்வி வலயத்தின் நாவிதன்வெளி கோட்டத்தில் அமைந்துள்ள மத்தியமுகாம் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் ( ஜி.எம்.எம்.எஸ் ) தரம் 7ல் கல்வி பயிலும் என்.நிப்ஸியா பேகம் எனும் மாணவி கிழக்கு மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
13 வயது பெண்கள் பிரிவில் 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கத்தையும் 100 மீற்றர் மற்றும் நீளம் பாய்தலில் வெள்ளிப்பதக்கங்களையும் பெற்று சம்பியனாக தெரிவாகியதுடன் தேசிய மட்டப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினையும் பெற்றுள்ளார்.
இம்மாணவி கடந்த 2009 ஆம் 2010ஆம் ஆண்டுகளில் 100 மீற்றர் மற்றும் நீளம் பாய்தல் போட்டிகளில் வெண்கலப்பதக்கத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடிக்கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய முகாமின் வர்த்தக சங்கம், கிராமிய அபிவிருத்திச் சங்கம், அல்-அஸார் விளையாட்டுக்கழகம், பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் உட்பட ஊர்மக்கள் அம்மாணவியையும் வெற்றிக்காக உழைத்த பாடசாலையின் விளையாட்டு ஆசிரியை எம்.ஏ.பஹ்மியா, அதிபர் எம்.சி.ஏ.காதர் உட்பட பாடசாலையின் பிரதி ,உதவி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவித்து வீதவழியாக ஊர்வலம் வந்ததுடன் அம்மாணவிக்கு சாதி மத பேதமின்றி மத்திய முகாமின் மக்கள் அன்பளிப்புக்களை வழங்கி கௌரவித்தனர்..
No comments:
Post a Comment