July 11, 2011 08:21 pm கல்முனை, சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுகளில் அபிவிருத்திக் குழு தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதேசத்திலுள்ள அரச அதிகாரிகளை அபிவிருத்தியின் பால் வழிநடாத்தும் பொறுப்புக்களை அந்தந்த பிரதேச அரசியல் வாதிகளின் கைகளில் ஒப்படைப்பதன் மூலமாக பிரதேச அபிவிருத்திகளை வெற்றிகரமாக அரசாங்கத்தால் முன்னெடுக்க முடியும் என்ற நோக்குடனேயே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகவும் கல்முனை மாநகரை 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்து அழகுபடுத்துவது தொடர்பாகவும் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு ஒன்றும் இடம்பெற்றது.
No comments:
Post a Comment