Tuesday, October 25

கிழக்கில் மீண்டும் பொலிஸில் பதிய உத்தரவு


மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகளில் தங்கியிருப்பவர்கள் விவரங்கள் பொலிசாரால் திரட்டப்படுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
வீடுகளில் நிரந்தரமாகத் தங்கியிருப்போர் மற்றும் தற்காலிகமாக தங்கிருப்போர் விவரங்கள் கேட்கப்படுவதாக உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்.
பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 76வது பிரிவின் கீழ் பொலிசாருக்குள்ள அதிகாரத்தின் கீழ் இந்தத் தகவல்கள் கேட்கப்படுவதாகத் தெரிகிறது.
இந்த தகவல்கள் குறித்து காவல்துறை அல்லது பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற முடியவில்லை.
ஆனால் மட்டக்களப்பு நகரில் மனித உரிமை வழக்கறிஞர் பே. பிரேம்நாத் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,


பொலிசாருக்கு இது மாதிரி தகவல்களைப் பெற அதிகாரம் இருக்கிறது என்றாலும், எதற்காக இந்தத் தகவல்கள் கேட்கப்படுகின்றன என்று மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டு பின்னர் தகவல்களைக் கேட்டால், மக்கள் அச்சமில்லாமல் தகவல்களைத் தருவார்கள் என்றார்.
பொலிசார் இது குறித்து தினசரிகள் ஊடாகவோ அல்லது பொதுப்படையாக ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்த பின்னரோ இதை செய்யவில்லை என்றார் அவர்.
ஆனால் இது குறித்து வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெறுவது சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment