அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் மறைந்த ஊடகவியலாளர்களான அமரர் கே.என்.தர்மலிங்கம் மற்றும் மர்ஹும் ஏ.எம்.அலிகான் ஆகியோருக்கான இரங்கற் கூட்டமொன்றை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில் ஒழுங்கு செய்திருந்தது.
சம்மேளனத்தின் தலைவர் கலாபுசணம் மீரா எஸ் இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் முன்னிலை அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி அல்ஹாபிஸ் என்.எம்.அப்துல்லாஹ் இ தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ஆகியோரும் கௌரவ அதிதிகளாக வீரகேசரி பிரதம ஆசிரியர் ஆர். பிரபாகன் இ தினக்குரல் பிரதம ஆசிரியர் வீ. தனபாலசிங்கம் இ ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போர தலைவரும் நவமணி பிரதம ஆசிரியர் அல் ஹாஜ் என்.எம்.அமீன் ஆகியோரும் விசேட அதிதிகளாக வீரகேசரி ஆசிரியர் பீட சிரேஷ்ட உதவி ஆசிரியர் கே.சிவராசா இ தினக்குரல் ஆசிரியர் பீட எம்.ஏ.எம்.நிலாம் ஆகியோரும் சிறப்பு அதிதகளாக ஓய்வு பெற்ற உதவி கல்விப்பணிப்பாளர் கவிஞர் மு.சடாட்சரன் இ சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ.பி.சிவப்பிரகாசம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment