கல்முனை மாநகரத்தில் சிறந்த நிருவாக கட்டமைப்பை ஏற்படுத்தி மக்களுக்கு சிறந்த சேவையை உடனுக்குடன் வழங்க கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் நடவடிக்கை எடுத்து வருகின்றார்.கடந்த காலங்களில் மாநகர சபை நடை முறைகளில் இருந்து வந்த குறைபாடுகள் களையப்பட்டு தற்போது முதல்வரினால் உடனடி தீர்வு வழங்கப் படுகின்றது.
கல்முனை மாநகரதுக்குட்பட்ட பிரதேசத்தில் காணப்படும் வர்த்தக நிலையங்கள் தொழில் நிலையங்களுக்கான வியாபார அனுமதிப் பத்திரம் சூழல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரம் என்பன முதல்வரின் நேரடி பரிசோதனையின் பின்னர் வழங்கப்படுகின்றன. கடந்த காலத்தில் இவ்வாறான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுவதற்கு சிலர் தகாத பெறுவனவுகள் பெற்று வந்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டதன் பின்னரே முதல்வர் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கி உரிய இடத்துக்கு சென்று அனுமதிப் பத்திரங்களை வழங்கி வருகின்றார்.
இதன் அடிப்படையில் நேற்று கல்முனை மருதமுனை பகுதிகளில் அமைந்துள்ள மதுபான சாலை மற்றும் மரம் அரியும் ஆலைகளுக்கு சென்று அவற்றுக்கான அனுமதி பத்திரங்களை வழங்கி வைத்தார். இந்த நிகழ்வுகளில் கல்முனை மாநகர ஆணையாளர் லியாகத் அலி சூழல் சுற்றாடல் அனுமதி பத்திரத்துக்கு பொறுப்பான உத்தியோகத்தர் அக்ரம் ஆகியோரையும் முதல்வர் ஸ்தலங்களுக்கு அழைத்து சென்றிருந்தார்.
No comments:
Post a Comment