தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் பேரவையின் எற்பாட்டில் நாளை டிசம்பர் 1ம் திகதி முதல் 4 ம் திகதி வரை தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு பொதுமக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்குமான மாபெரும் பண்பாட்டு விழாவும் கண்காட்சியும் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு இன்று (2011.11.30) பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லா தலைமையில் இடம்பெற்றது. இதில் சிரேஸ்ட மாணவ ஆலோசகர் கலாநிதி ஏ.எப்.எம்.அஷ்ரப் மாணவர் நலன்புரிப் பிரிவுப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.முஸ்தபா, திட்டப் பணிப்பாளர் கே.எம். முபாறக் மாணவப் பேரவைச் செயலாளர் ஆர.எம். சஞ்சீவ பண்டார, கலைப் பிட மாணவர் பேரவைத் தலைவர் எம்.எஸ்.எம். சப்ரீன் ஆகியோரும் கலந்து கொண்டு இவ்விழாத் தொடர்பாக விளக்கமளித்தனர்.
நாளை காலை 10.00 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ள இவ்விழவின் ஆரம்ப நிகழ்வுக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார். பிரதேச மக்களுக்கும் பல்கலைக்கழக சமூகத்திற்குமிடையில் புர்ரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'எனது தேசத்தின் ஒருமைக்காக இணையும் கரங்கள்' மாணவர் பண்பாட்டு விழா – 2011 எனும் நிகழ்வ தினமும் 5 பிரதான பகுதிகளாக இடம்பெறவுள்ளன.
கல்விக் கண்காட்சி, கலை நிகழ்வுகள், புத்தகக்கண்காட்சி, மரபுசார் உணவுத் திருவிழா, திரைப்பட விழா என்பன அடங்கியதாக நாளாந்த நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. பொதுவாக திறந்த வெளிப் பண்பாட்டு நிகழ்வுகள், மேடை நிகழ்வுகள் என இரு பிரதான பிரிவுகளாக இவை இடம்பெறவுள்ளன.
மேலும் சிறுவர் சாகச கண்கவர் நிகழ்ச்சிகள், விநோத வேடிக்கைகள், வர்த்தகக் கண்காட்சி, சிங்களக் கவியரங்கு, தீ மற்றும் கத்தியுடனான நடனம், இசை நிகழ்ச்சி, நாட்டார் கவியரங்கு, இஸ்லாமிய இசை நிகழ்ச்சி என்பன போன்ற பல்வேறு சிறப்ப நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
பல்கலைக்கழகத்தில் முதன் முதலாக பாரியளவில் இடம்பெறுகின்ற இவ்விழாவிற்கு பாடசாலை மாணவர்கள் ரூபா 10.00 உம் வளர்ந்தோர் ரூபா 30.00 உம் நுழைவுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்படடுள்ளது.
No comments:
Post a Comment