(நமது செய்தியாளர்)
அண்மையில் பரபரப்புக்குள்ளான ஒலுவில் அஷ்ரப் நகர காணிகள் சம்பந்தமான பிரச்சினைகளில் அப்பிரதேச கிராம சேவையாளரை பொதுநிர்வாக அமைச்சின் உடனடி அறிவித்தலின்படி சேவையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகரத்தில் அண்மைக்காலமாக காணிகள் சம்பந்தப்பட்ட சலசலப்புக்களும், இராணுவ முகாமை அமைத்தல் போன்ற விடயங்களும் பெரும் பரப்பை ஏற்படுத்தி அவை அமைச்சர்கள் மட்டத்தில் சென்றன.
இந்நிலையில் காணிகளை தனிப்பட்ட செல்வாக்குகளை பயன்படுத்தி வெளியாருக்கு விற்பனைசெய்தமை, சட்டவிரோதமான முறையில் ஆவணங்களைப் பெற்றுக் கொடுத்தமை போன்ற விடயங்கள் காரணமாக உயர்மட்ட விசாரணையை மேற்கொண்ட புலனாய்வுப் பிரிவின் அறிக்கையைத் தொடர்ந்து உடனடியாக நேற்று புதன்கிழமையிலிருந்து சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரியவருகின்றது.
No comments:
Post a Comment