Wednesday, November 2

"புதிய மாணவர்களை வரவேற்றலும் ஆற்றுப்படுத்தலும்" செயலமர்வு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில்


 
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக 2010/2011ம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை வரவேற்றலும் ஆற்றுப்படுத்தலும் எனும் தலைப்பிலான செயலமர்வு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
கலை கலாச்சார பீடத்தில் இவ்வாண்டுக்கான கல்வியினை தொடர்வதற்காக புதிய மாணவர்களை வரவேற்றலும் ஆற்றுப்படுத்தலும் எனும் தலைப்பிலான செயலமர்வு மொழித்துறைத் தலைவர் கலாநிதி எம்.ஏ.எம். ரமீஸ் அப்துல்லா தலைமையில் பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீடாதிபதியும் பதில் உபவேந்தருமான கே.எம்.எம்.பழீல்ஹக், பதிவாளர் எச். அப்துல் சத்தார், நிதியாளர் குலாம் றஸீட், புவியியற் துறைத் தலைவர் எம்.எல்.பௌசுல் அமீர், சமூக விஞ்ஞானத் துறைத் தலைவர் எம்.ஏ.ஜப்பார். ஆங்கில கற்கைநெறிதலைவர் எம்.ஏ.எம்.சமீம், கணனி பிரிவுத் தலைவர் ஜே.எம்.நஸீர் மற்றும் சிரேஷ்ட உதவி பதிவாளர் எஸ்.சிவக்குமார் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு விரிவுரைகளையும் நிகழ்த்தினர். இச்செயலமர்வின் போது சிரேஷ்ட, கனிஸ்ட விரிவுரையாளர்களும் மாணவர்களும், பெற்றோர்களும் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டமை குறிப்படத்தக்கது.








No comments:

Post a Comment