The Muslim Heritage of Eastern Sri Lanka என்ற தலைப்பிலான ஆங்கில நூல் ஒன்று வெளிவந்துள்ளது. 10 வேறுபட்ட மையக்கருக்களில், 14 கட்டுரைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நன்கறியப்பட்ட கிழக்கிலங்கை கல்வியாளரான எஸ்.எச்.எம். ஜெமீலும், பத்திரிகையாளர் ஆஸிஃப் ஹுஸைனும் இணைந்து பல ஆய்வாளர்கள் எழுதியுள்ள கட்டுரைகளை தொகுத்து பதிப்பாசிரியர்களாக செயற்பட்டுள்ளனர். இதனை ஜெஸீமா இஸ்மாயில் தலைமைவகிக்கும் முஸ்லிம் பெண்கள் ஆய்வு மற்றும் செயல் முன்னணி வெளியிட்டுள்ளது.
கிழக்கு முஸ்லிம்களது பாரம்பரியம், மரபுரிமை தொடர்பாக ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள முதல் நூலாக இது இருக்கக்கூடும் என்று அபிப்பிராயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நூல் பதினொரு அத்தியாயங்களை உள்ளடக்கி 301 பக்கங்களில் வெளிவந்துள்ளது. இதில் 200 புகைப்படங்களும் உள்ளன.
No comments:
Post a Comment