Thursday, November 24

கல்முனை அஸ்ரப் வைத்தியசாலை குறைபாடுகளை நிவர்த்திக்க பிரதி மேயர் நிஸாம் காரியப்பர் உறுதி!

Slide2கல்முனை அஸ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலைக்கு கல்முனை மாநகர பிரதி மேயரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி செயலாளர் நாயகமுமான சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் நேற்று புதன்கிழமை திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு நிலைமைகளை அவதானித்தார்

இதன்போது வைத்தியசாலையில் தற்போது நிலவும் குறைபாடுகளையும் தேவைகளையும் வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் ஏனைய வைத்தியர்களிடம் கேட்டறிந்து கொண்ட பிரதி மேயர் குறைபாடுகளை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் ஏனைய தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

இவ்விஜயத்தின்போது பிரதி மேயருடன் ஆலோசனை சபை உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.


Slide3
Slide4
2/3
start stop bwd fwd

No comments:

Post a Comment