அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரச்சை சேர்ந்த அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தற்போதைய அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான ஏ.எல்.எம்.தவம் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது
இது தொடர்பில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் சிலர் நேற்று இரவு அவரது இல்லம் சென்று பேச்சு நடத்தியுள்ளனர் என அறிய முடிகின்றது.
அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தற்போதைய அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான ஏ.எல்.எம்.தவம் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற மாற்றத்துக்கான ஒன்றுகூடலின் போது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் மற்றும் கொள்கை பரப்பு செயலாளர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி ஆகியோர் கலந்து கொண்டனர் என அறிவிக்கப்படுகிறது
No comments:
Post a Comment