Friday, April 13

சாய்ந்தமருது முபிதா உஸ்மானுக்கு சிறந்த பெண் விருது!


1சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவின் சிறந்த பெண்னாகவும் அம்பாறை மாவட்ட ரீதியில் இரண்டாம் நிலை vசிறப்பு விருதையும் கலாபூசனம் ஜனாபா முபிதா உஸ்மான் பெற்றுள்ளார். பெண்கள் அபிவிருத்திக்கு அவர் ஆற்றிய மகத்தான சேவைக்காகவே இவ்விருதுகள் வழங்கி அவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட செயலகம் நடத்திய சர்வதேச பெண்கள் தின வைபவத்தில் மாவட்ட செயலாளர் திரு நீல் டி.அல்விஸ் அவர்களினால் கலாபூசனம் முபிதா உஸ்மான் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
 


இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பத்திரிகையாளர் என்ற அந்தஸ்த்தைப் பெற்ற ஊடகவியலாளரான முபிதா உஸ்மான் தினபதி, சிந்தாமனி பத்திரிகைகளில் உதவி ஆசிரியராக கடமையாற்றிய பின் அரசாங்க தகவல் தினைக்களத்தில் பிரச்சார உதவியாளராக மற்றும் பத்திரிகை தொடர்பு உத்தியோகத்தராக பல வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் இஸ்லாமிய ரிலீப் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தில் அதன் இணைப்பாளராக கடமையாற்றிய இவர் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்ட்ட மாவட்ட மக்களுக்கு இன மத வேறுபாடின்றி பல வழிகளிலும் பணிபுரிந்து மக்களின் நன்மதிப்பைப் பெற்றவராவார்.

அத்துடன் முஸ்லிம் சமாதான செயலகத்தின் அம்பாறை பிராந்திய பணிப்பாளராக கடமையாற்றிய இவர் சமூகங்களிடேயே நல்லுறவு, ஐக்கியம் மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் பொருட்டு அளப்பெரிய சேவையாற்றினார்.

சிறிது காலம் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் விடுதி மேற்பார்வையாளராகவும் கடமை வகித்துள்ளார். 40 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறை மற்றும் சமூகப் பணியில் ஈடுபட்டு உழைத்துக் கொண்டிருக்கிறார்.

இத்தகைய பணிகளின் காரணமாகவே கலாபூசனம் முபிதா உஸ்மான், சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவின் சிறந்த முதல் பெண்னாகவும் அம்பாறை மாவட்ட ரீதியில் இரண்டாம் நிலை சிறப்பு விருதுக்காகவும் தெரிவு செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment