BBC TAMIL
இலங்கையின் தம்புள்ள நகரிலுள்ள ஒரு பள்ளிவாசலும் அதன் அருகிலுள்ள ஒரு காளி கோவிலும் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என்று உள்ளூர் புத்த பிக்குகள் போராடி வருகின்றனர்.Audio
அப்பள்ளிவாசல் அங்கிருந்து அகற்றப்படாவிட்டால், அது பலவந்தமாக அகற்றப்படும் என்று பிக்குகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இந்நிலையில் இலங்கையின் மிகப்பெரிய முஸ்லிம் கட்சியும் அரசில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியுமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இச்சம்பவம் குறித்து சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும், அந்தப் பள்ளிவாசலை அகற்ற வேண்டும் என்று விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் அரசின் மீது அழுத்தங்களை கொடுக்கவில்லை என்றும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்தும், இலங்கை முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் துணைப் பொதுச் செயலர் நிசாம் காரியப்பர் தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்களை இங்கே கேட்கலாம்.
No comments:
Post a Comment