இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் பரஸ்பர புரிந்துணர்வினையும் சகல இனங்களினதும் கலை கலாசார மற்றும் உணவு வகைகளை மாணவர் மத்தியில் தெளிவுபடுத்தும் வகையில் சாய்ந்தமருது வொலிவேரியன் வீடமைப்பு திட்டத்தில் அமைந்துள்ள எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் புதுவருட நிகழ்வொன்று இன்று பாடசாலை அதிபர் ஏ.எல்.ஏ.நாபித் தலைமையில் இடம்பெற்றது. கல்முனை மாநகர மேயர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாகவும் , கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக் கௌரவ அதிதியாகவும் சர்வ மத தலைவர்கள் விசேட அதிதிகளாகவும் பிரதேச பாடசாலை அதிபர்கள் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர். மாணவர்களாலும் பெற்றோர்களாலும் தயாரிக்கப்பட்ட பலவகையான உணவுப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததுடன் அதிதிகள் மற்றும் மாணவர்களுக்கும் நிகழ்வின் இறுதியில் இவ் உணவுப் பொருட்கள் பரிமாறவும் பட்டது.
No comments:
Post a Comment