கல்முனை மாநகர சபையின் திண்மக் கழிவகற்றல் செயற்பாடு தொடர்பாக பொதுமக்களால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகள் பற்றி சுகாதார பிரிவு ஊழியர்களுடன் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நேற்று (03.04.2012) கலந்துரையாடினார்.
இதன்போது திண்மக் கழிவகற்றல் செயற்பாட்டை திறன்பட மேற்கொள்வதில் சுகாதார பிரிவு ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இனங்காணப்பட்டு முதல்வரினால் அவற்றிற்கான தீர்வுகள் பெறப்பட்டன.
தினமும் காலை 7.00 மணிக்கு திண்மக் கழிவகற்றும் பணி ஆரம்பிக்கப்படவேண்டுமென முதல்வரினால் பணிப்புரை விடுக்கப்பட்டது. மேலும் இம்மாத நடுப்பகுதியில் அமுலுக்கு வரும்வகையில் காலை, மாலை முறை மாற்றுப் பணி அடிப்படையில் திண்மக் கழிவகற்றல் செயற்பாட்டினை துரிதப்படுத்தும்வகையில் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment