(எம்.பரீட்)
'கிழக்கு மாகாணத்திற்கு கடந்த ஓரிரு மாதங்களாக பல பிரதேசங்களுக்கு அடிக்கடி போய் வந்த கொண்டிருக்கின்றேன். கிழக்கில் எந்த முஸ்லிம் பிரதேசங்களிலும் அரசாங்கத்திற்கு திருப்திகரமான நிலையில் இல்லை. அரசாங்கத்தின்மீது திருப்திகரமாக இருப்பதாக யாரும் சொல்வர்களானால் அது மகா புளுகாகவே இருக்கும். இதனை நான் சொல்லித் தெரிந்து கொள்ளத் தேவையில்லை. எல்லோருடைய மனச் சாட்சியைத் தொட்டுத் தெரிந்து கொள்ள முடியும்' என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை தொடர்பான விளக்க கூட்டமொன்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தலைமையில் கிண்ணியா பிரதேசத்தில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.ஹரீஸ், கிண்ணியா, மற்றும் தம்பலகாமம், கந்தளாய், மூதூர், சேருவல பிரதேச உள்ளுராட்சி மன்ற தவிசாளர், மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
'இன்றைய நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை எது என்பதை அறிந்து கொள்ளவே எல்லோரின் பார்வையும் உள்ளது.
இதனை அடிக்கடி பத்திரிகையெல்லாம் ஒவ்வொரு விதமாக எழுதிக் கொண்டிக்கின்றார்கள், கார்ட்டூன் போடுகின்றார்கள் நான் ஏதோ பெரிய கேக் துண்டைப் பறிப்பதற்கு பார்த்துக் கொண்டிருப்பதாக மாதிரியெல்லாம் படங்கள் வரைகின்றார்கள்.
பிரிந்த கிழக்கு மாகாணத்தில் இந்த அரசாங்கத்திலும், எதிர்க்கட்சியின் பக்கம் இருந்து திருகோணமலை மாவட்டத்தில் போராடி வென்று காட்டினோம்.
அரைவாசி காலம் எதிர்க்கட்சியிலும் அரைவாசி காலத்தினை ஆளும் கட்சியிலும் அரசாங்கத்தின் பக்கம் இருந்து அமைச்சராக பதவிகளை வகித்து வந்திருக்கின்றோம். அமைச்சர் பதவிகளை எறிந்து விட்டு வருவதற்கு தயங்கவில்லை.
இன்றைய தேர்தலில் ஐ.தே.கவை பற்றி பேசுவதற்கில்லை, மூன்று பிரதான கட்சிகள் இருக்கின்றன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அதற்குள் உள்ளிருக்கும் உதிரிக்கட்சிகள், மற்றது தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதில் அடித்துப் போட்டாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் கூட்டுச் சேரப் போவதில்லை.
இந்த மூன்று கட்சிகளில் இரண்டு கட்சி கூட்டுச் சேர்ந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். இதில் யார் சேர்ந்தாலும் சரி இதனோடு ஐக்கிய தேசியக் கட்சியையும் இணைத்துக் கொண்டால் போனஸ் ஆசனத்தையும் பெற்றுக் கொள்ளமுடியும். இதுதான் அரசியல்.
இன்று கிழக்கு மாகாண மாகாண சபையை கலைக்கக் கூடாது என்று கிழக்கு முதலமைச்சர் வழக்கு போடவுள்ளார். இதில் முஸ்லிம் காங்கிரஸையும் இணைந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டிருக்கின்றார்
கிழக்கு மாகாண சபைக் கலைக்கப்பட்டு வேட்புமனுத்தாக்கலுக்கு காலமுள்ளது. அந்ந சந்தர்ப்பத்தில் நாம் இது பற்றி பேசிக் கொள்வோம்' எனறார்.
No comments:
Post a Comment