Thursday, June 28

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் சுற்றாடலை அழகுபடுத்தும் திட்டம் ஆரம்பம்

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் சுற்றாடலை அழகுபடுத்தும் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அழகான ரம்மியமான சூழலில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற் கொள்ளுமுகமாகவும் கல்லூரி வளாகத்தினை இப்பிரதேசத்திலேயே மிகவும் அழகிய பிரதேசமாக மாற்றுமுகமாக  மாணவர்களும் ஆசிரியர்களும் அதிபர் ஏ.ஆதம்பாவா தலைமையில் இந்த நடவடிக்கையினை துரிதப்படுத்தியுள்ளனர்.

கல்லூரியின் ஆங்கிலப்பிரிவில் இத்திட்டத்தின் முதல் கட்டம் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 கல்லுாரியின் நுழைவாயில் பிரதேசத்தினை அழகுபடுத்தும் நடவடிக்கையில் தற்போது ஒரேஞ் ரீ கம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளரும் கல்லூரியின் பழைய மாணவருமான ஏல்.எல்.எம்.நாஸரின் உதவியுடன் கல்லூரியின் சுற்றாடல் மேம்பாட்டு கழகம் சில வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
 இக்கல்லூரியின் சுற்றாடலை மேலும் அழகு படுத்தும் வகையில் பழைய மாணவர்கள், பெற்றோர், தனியார் நிறுவனங்கள் மற்றும் நலன்விரும்பிகளிடமிருந்து உதவிகளும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுவதாகவும் தொடர்புகளுக்கு அதிபரையோ அல்லது +94779775795 என்ற தொலைபேசி இலக்கத்தில் அஸ்ஹர் ஆசிரியரையோ தொடர்பு கொள்ளுமாறு கல்லூரியின் சுற்றாடல் கழகம் கேட்டுள்ளது.




Model

 

No comments:

Post a Comment