Tuesday, June 19

கிழக்கு மாகாண சபை கலைப்படுவதைத் தடுக்குமாறு சமர்ப்பிக்கப்பட்ட மனு இன்று விசாரணைக்கு!

 
 
கிழக்கு மாகாண சபையை நிர்வாக கால நிறைவுக்கு முன்னர் கலைக்கப்படுவதை தடுக்குமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட, இடைக்கால தடையுத்தரவு கோரல் மனு இன்று மேன்முறையீட்டு
நீதிமன்ற விசாரணைக்கு வருகின்றது.
எவ்வாறாயினும், கிழக்கு மாகாண சபையின் ஐந்து வருட கால ஆயுட்காலம் வருகின்ற 2013 ஆம் ஆண்டு மே 10 ஆம் திகதி முடிவுக்கு வருகின்றது.
அதற்கு முன்னதாக மாகாண சபையை கலைப்பதற்கு இடைக்கால தடை விதிக்க ஆளுனருக்கு உத்தரவிடக் கோரி, மன - திம்பிரிகொல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக கிழக்குமாகாண ஆளுனர் ரியர் அத்மிரல் மொஹான் விஜேவிக்ரம, கிழக்கு மாகாண அமைச்சர்கள் நவரட்னராஜா, எல்.எஸ்.சுபைர், மீரா சயிபுஉல்துல் மற்றும் விமலவீர திசாநாயக்க ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பு சட்டங்களுக்கு அமைய கிழக்கு மாகாணத்தை கலைக்கும் செயற்பாடு முதலமைச்சரின் ஆலோசனைக்கு அமைய இடம்பெற வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாகாணசபையை கலைக்க கூடாது என சபையில் பொது கருத்து ஒன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதனை கலைக்குமாறு மாகாண ஆளுநருக்கு உத்தரவிடுவதற்கு, மாகாண முதலமைச்சருக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment