கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்காக அரச தரப்பிலிருந்து இதுவரை எவரையும் முன்நிறுத்தவில்லையென அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரெம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது,
கிழக்கு மாகாண வேட்புமனுத் தாக்கல் நடைபெறும்போது முதலமைச்சர் பதவிக்கு ஒருவருடைய பெயரை அரசு முன்மொழியும். ஆனால் இதுவரை யாரையும் அரசாங்கம் வேட்பாளராக நியமிக்கவில்லை.
கிழக்கு தேர்தல் தொடர்பாக அரசாங்கம் நீண்ட கலந்துரையாடலை மேற்கோண்டுவந்தது. அதன்படி இன்னும் இரண்டொரு வாரங்களில் மாகாண சபை கலைக்கப்பட்டு தேர்தலை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஆனால் தேர்தலுக்கான திகதியை இன்னும் முடிவு செய்யவில்லை.
கிழக்கு மாகாண சபைக்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் என்று யாரை வேண்டுமானாலும் நிறுத்தமுடியும். ஆனால் அந்தச் சபைக்கு பொறுப்பான ஒருவரையே நியமிக்க வேண்டும் என்பது அரசின் விருப்பமாகும்.
No comments:
Post a Comment