கிழக்கின் உதயம் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் சாய்ந்தமருது ஒராபிபாஸா வீதியினை நிர்மாணிப்பதற்கான நிர்மாணப் பணி அன்மையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
ஸாஹிரா தேசிய பாடசாலைக்கு தெற்கு புறமாக அமைந்துள்ள மேற்படி வீதி குன்றும் குழியுமாக காணப்பட்டது. இதனால் பாடசாலை மாணவர்கள்,பாதசாரிகள் ஆகியோர் பல இன்னல்களுக்கு உள்ளாகினர். இதனை கவனத்திற் கொண்ட கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ்
முன்னெடுக்கப்படும் வடக்கு, கிழக்கு உள்ளூராட்சி சேவைகள் மேம்படுத்தல் திட்டத்தில் நிர்மாணிப்பதற்காக முன்மொழிந்தார். அதன் அடிப்படையில் மேற்படி வீதியானது ரூபா 5,708,848.20 செலவில் நிர்மாணிப்பதற்கான நிர்மாணப் பணியினை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் ஆரம்பித்துவைத்தார்.
இதன்போது மாநகர ஆணையாளர் ஜே. லியாகத் அலி,மாநகர சபை உறுப்பினர்கள், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.
No comments:
Post a Comment