கல்முனை செய்தியாளர், F.M.பர்ஹான்:
கல்முனை மாநகர சபையானது தனது வரு மானத்தை அதிகரிப்பதற்கான செயற்பாட்டை
துரிதப்படுத்த்தும் முகமாக இரண்டு அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இன்று
(19.06.2012) முதல்வர் செயலகத்தில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ்
மீராசாஹிப் தலைமையில் ஆசிய பவுன்டேசன் அனுசரணையில் இடம்பெற்றத
இந்நிகழ்விற்கு மாநகர ஆணையாளர் ஜே. லியாகத் அலி, கணக்காளர் எல். ரீ.
சாலிதீன் ஆசிய பவுன்டேசன் கிழக்குமாகாண நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்
மற்றும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சின்
அணுசரனையுடனும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடனும் ஆசிய மன்றம்
உள்ளூராட்சி மன்றங்களில் நடைமுறைப்படுத்துவரும் உள்ளூர்பொருளாதார ஆட்சி
செயற்திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபையின் வருமானத்தை அதிகரிப்பதற்காக
உள்ளூராட்சி மண்றங்களுக்கும் மக்களுக்குமிடையிலான தொடர்பை
அதிகரிக்கும்பொருட்டு மேற்படி அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்படவதற்கான ஒரு
இணக்கப்பாடாகவே குறித்த ஒப்பந்தம் திகழ்கிறது.
குறித்த நிறுவனங்கள் மாநகர சபையின்
வருமானத்தை அதிகரிக்கும் வகையில் மக்கள் மத்தியில் வரி தொடர்பிலான
விளிப்புணர்வை ஏற்படுத்துவதோடு வியாபார அனுமதிப்பத்திரம் பெற்றுச்
செயற்படுகின்ற வர்த்தக ஸ்தலங்கள், வியாபார அனுமதிப்பத்திரம் அற்ற வியாபார
ஸ்தலங்கள் தொடர்பான புள்ளி விபரங்களை திரட்டி மாநகர சபைக்கு வழங்கவுள்ளனர்.
அத்தோடு மக்கள் பங்களிப்புடனான வரவு செலவுத் திட்டத்தினை தயாரிப்பதற்கான
ஏற்பாடுளையும் விளிப்புணர்வையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தவுள்ளனர்.
No comments:
Post a Comment